விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் பெருமிதம்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மருத்துவ கனவை நனவாக்கியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் பெருமிதம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை திருவட்டார் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்களிலுள்ள 140 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, பேசியதாவது.

ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர்கள் தங்கள் அருகாமையிலுள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று, கல்வி பயில ஏதுவாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அத்திட்டம் கடைக்கோடி மாணவ, மாணவியர்களுக்கும் சென்றடைகின்ற வகையில் செயல்படுத்தி வந்தார்.

கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் அருகாமையிலுள்ள பள்ளிகளுக்கு சென்று எளிதாக கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், இருபாலருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், இதுநாள் வரை அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்வதில் எவ்வித சிரமமும் இருக்க கூடாது என இருபால் மாணவ, மாணவியர்கள் மீது கொண்ட அக்கறையின் அடிப்படையில், பேருந்தில் செல்லும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பேரூந்து பயண அட்டைகள் வழங்கும் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 140 பள்ளிகளில் பயிலும் 7 ஆயிரத்து 528 மாணவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 809 மாணவிகள் என ரூ.6.44 கோடி மதிப்பில், 16 ஆயிரத்து 337 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், குக்கிராமங்களிலுள்ள மாணவ, மாணவியர்கள் எளிதில் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும் வில்லையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தி தந்தார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருமநல்லூரிலுள்ள மாணவ, மாணவிகள் கல்வி பயில வேண்டுமானால் திட்டுவிளைக்கு வரவேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், அருமநல்லூர் பகுதியிலேயே மாணவ, மாணவியர்கள் 12-வரை பயில வழிவகை செய்ததோடு, மலை கிராமங்களை சேர்ந்த பள்ளிகளை தரம் உயர்த்தியதும், இந்த அரசு என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்திய அரசியலமைப்பின் 162 -வது பிரிவின் கீழ் எந்த மாநிலத்திலும் இல்லாது நமது மாநிலத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில்வதற்கு கொண்டு வந்தார். இதனால் அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களும் மருத்துவ கனவினை நனவாக்கி தந்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மாணவ, மாணவியர்களை பெரிய பதவியில் மருத்துவராகவோ பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ, அரசியல்வாதியாகவோ, விஞ்ஞானியாகவோ மாற்றுவதற்கு சிறந்த ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதில் பள்ளி ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது ஆகும். அவர்களது பணிபாராட்டுக்குரியது.நமது மாவட்டம் கல்வி மற்றும் பள்ளியின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளில் சிறந்து விளங்குவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை வாழ்த்தியுள்ளார். அனைத்து மாணவ மாணவியர்களும் முன்னேற வேண்டுமானால் தங்களது குருவை மதிக்க வேண்டும். சிறந்த கல்வியை சொல்லி தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நீங்கள் பெருமை சேர்க்க வேண்டுமானால் அனைவரும் நன்றாக கல்வி பயின்று, மிக உயர் பதவியில் அமர்ந்து, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

மேலும், கொரோனா காலத்தில் பொதுமக்களை காப்பதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து அரசு அலுவலர்களும் முக்கிய பங்காற்றியுள்ளார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று விலையில்லா மிதிவண்டி பெறும் மாணவ, மாணவியர்களாக நீங்கள் விடா முயற்சி, தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று வாழ்வில் பதவிகளை அடைய வேண்டும். மேலும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர்கள் முனைவர் மோகனன் (நாகர்கோவில்), இராமசந்திரன் (தக்கலை), ரெஜினி (திருவட்டார்), மாவட்ட ஊராட்சித்தலைவர் டாக்டர் மெர்லியன்ட் தாஸ், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் சேவியர் மனோகரன், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், இந்து சமய அறநிலைய தலைவர் திரு.சிவ செல்வராஜன், என்னதான் அவை கிடக்கு வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!