திருப்பரங்குன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச திருமணம்!

திருப்பரங்குன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச திருமணம்!

தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று (நவம்பர் 27) தனது 48-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு தனது தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஆகியோரை சந்தித்து உதயநிதி பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து,

“உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் – அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம். எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மதுரை மாவட்டம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில்  தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அறங்காவலர் குழு தலைவி  சத்யபிரியாபாலாஜி அவர்கள் இலவச சீர்வரிசை உடன் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மதுரை தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர்  பாலாஜி மற்றும் திருப்பரங்குன்றம் மண்டல தலைவி சுவிதா விமல் 97வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமையா பொம்மதேவன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

-போட்டோ கார்த்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!