கோ

மாபெரும் கோலப் போட்டி நீங்களும் கலந்து கொள்ளலாம்!
தைத்திருநாளை முன்னிட்டு லெமூரியா நியூஸ் மற்றும் சிகரம் உலக சாதனைகள் அமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் வண்ண கோலப்போட்டி!
திருநாள் என்றாலே வாசலில் வண்ணக்கோலம் இடுவது தமிழரின் பாரம்பரியம். அதுவும் தைத்திங்கள் பொங்கலன்று நம்வீட்டு வாசலில் பல்வேறு வகையான கோலமிட்டு அதனை வண்ணக் கோலப்பொடி கொண்டு அலங்கரிப்பது என்பது பெண்களுக்கு கைவந்த கலை.
தான் வரைந்த கோலத்தை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என நாம் நினைப்போம். அதுவும் நம் கோலம் நன்றாக இருக்கிறது என அக்கம்,பக்கத்தினர் ஊரில் பேசிக்கொண்டால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
தைத் திருநாளை முன்னிட்டு நமது ‘லெமூரியா நியூஸ்’ மற்றும் ‘சிகரம் உலக சாதனைகள் அமைப்பு’ இணைந்து நடத்தும், மாபெரும் வண்ணக் கோலப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு உங்கள் இல்லங்களின் வாசலில் உங்கள் எண்ணங்களை வண்ணமயமாக்கி வரையும் கோலங்களை படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். சிறந்த முதல் மூன்று கோலங்களுக்கு முத்தான மூன்று பரிசுகளும், அடுத்த பத்து கோலங்களுக்கு சிறப்பான பரிசுகளும் வழங்கப்படும்.
13,14,15,16ம் தேதிகளில் போடப்படும் கோலங்களை படம்பிடித்து அனுப்புங்க. பரிசுகளை வெல்லுங்க. உங்கள் கோலங்களை 17.01.2024 தேதிக்குள் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் அனுப்பும் முறை: உங்கள் வண்ண கோலங்களை புகைப்படமாக எடுத்து கீழ உள்ள வாட்ஸ்அப் லிங்க்கை கிளிக் செய்து எங்களுக்கு அனுப்பவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.