மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – இயக்குனர் நித்திலன் கூட்டணியில் உருவாகி கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மகாராஜா.
நித்திலன் இயக்கத்தில் இதற்கு முன் குரங்கு பொம்மை திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. விமர்சன ரீதியாக இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.
இதை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள மகாராஜா திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல்
முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் மகாராஜா திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 76 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.