தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம், அண்ணாநகர், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட கால்வாயினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை தீவிரமாக பெய்யும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகள், அப்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னையில் பல்வேறுதுறை அதிகாரிகளுடன் முதலமைச்சர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை விருகம்பாக்கம், அண்ணாநகர், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட கால்வாயில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் கால்வாயில் ஏதேனும் குப்பைகள் தேங்கியிருந்தால் அதனை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.