திருச்சுழியில் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா.!
தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் இன்று தனது 70வது அகவையை எட்டியுள்ள நிலையில், அவரை உலகத் தமிழினம் இன்று கொண்டாடி மகிழ்கிறது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி பரளச்சி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாமில் இனிப்புகள் வழங்கப்பட்டு அன்னதானமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக திருச்சுழி தெற்கு தொகுதி செயலாளர் முனியசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாயக்கருப்பு, பிரேம், விஜய் ஆகியோர் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்கள். கிழக்கு மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
திருச்சுழி தெற்கு தொகுதி தலைவர் ஜோதிலிங்க கருப்பசாமி, திருச்சுழி தெற்கு தொகுதி துணை செயலாளர் வெங்கடேஷன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இரத்ததான முகாமில் 50-ற்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். அன்னதான நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.