மூத்திர சந்தில் பாண்டிய மன்னரின் அடையாள சிலை.! தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் திராவிட சதித்திட்டம்..! மதுரையில் நடக்கும் அட்டூழியம் என்ன தெரியுமா..?

மூத்திர சந்தில் பாண்டிய மன்னரின் அடையாள சிலை.! தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் திராவிட சதித்திட்டம்..! மதுரையில் நடக்கும் அட்டூழியம் என்ன தெரியுமா..?

மதுரை தொடர்வண்டி நிலையம் முன்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 1999ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் நினைவைப் போற்றும் வகையில் மீன் சின்னம் வைக்கப்பட்டது.

அந்த சிலையானது ரூ 8 இலட்சம் செலவில் உருவானது. 3 மீன்கள் நீருற்றில் துள்ளுவது போன்று 15 அடி உயரம், 3 டன் எடை கொண்டதாகும் . தொடர்வண்டி வண்டி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மீன் சிலை அகற்றப்பட்டது.

2023ஆம் ஆண்டில் மீன் சிலையை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் வைத்திட மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி தலைவராகக் கொண்ட மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற உறுப்பினர் , சட்ட மன்ற உறுப்பினர், காவல் துறை ஆணையர் உள்ளிட்ட இக்குழுவானது மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மீன் சிலையை வைக்க பரிந்துரை செய்தது. மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கூட்டத்திலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் மீன் சிலை அமைப்பின் குழுவின் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை மீன் சிலை இடத்தை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்திடம் மதுரை மாநகராட்சி ஒப்படைக்கவே இல்லை. மதுரை மாநகராட்சி மீன் சிலை வைக்க இடம் தராமல் இழுத்தடித்து வருவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது‌.

இதற்கிடையில், மதுரை மாநகராட்சி நிர்வாகம் செல்லூர் மேம்பாலம் அருகே உள்ள கபடி வீரர்கள் சுற்றுச் சாலை ( ரவுண்டானா) எதிரில் இரண்டு மீன்கள் துள்ளுவதைப் போல சிமிந்தில் செய்யப்பட்டு, அதே வெண்கல நிறத்தில் வர்ணம் பூசி நிறுவியுள்ளது.

இது போலியான மீன் சிலையாகும். இப்போது வைக்கப்பட்ட மீன் சிலை உள்ள இடம் மாடுகள் கட்டிப் போடும் இடமாகும். போவோர் வருவோர் எல்லாம் சிறுநீர் கழிக்கும் மூத்திர சந்தாகும். இது பாண்டிய மன்னர்களின் அடையாளத்தை இழிவு செய்யும் உள் நோக்கம் கொண்டது. மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் வெண்கல சிலையை நிறுவாமல், வெண்கல நிறத்தில் வர்ணம் பூசி மதுரை மாநகராட்சி நீதிமன்றத்தை ஏமாற்றி வருகிறது.

மீன் சிலை குழுவில் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜூ, தளபதி, புதூர் பூமிநாதன் உள்பட எவரும் வாய் திறந்து கண்டிக்க மறுக்கிறார்கள் . மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூட இதுவரை வாயே திறக்க வில்லை . இவர் வாய் கீழடிக்கு மட்டும்தான் திறக்கும். பாண்டியர் மீன் சின்னம் என்றால் சுளுக்கி விடும்.

மதுரையில் மீன் சிலையை மீண்டும் வைக்க விரும்பாத மதுரை மாநகராட்சி நிர்வாகம் அடுத்த கட்டமாக மேம்பாலம் கட்டுவதை சாக்கிட்டு, தமுக்கம் திடலில் உள்ள தமிழன்னை சிலை, சங்கர தாஸ் சுவாமிகள் சிலை, தல்லாகுளத்தில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்றவர்களின் சிலைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது அப்பட்டமான திராவிட மாடல் அரசின் தமிழின அடையாள அழிப்புக் கொள்கையாகும்.

திராவிட மாடல் அரசே!
போலியான மீன் சின்னத்தை வைத்து தமிழர்களை ஏமாற்றாதே! பெரியார் நிலையம் அருகே
மீன்சிலையை நிறுவி உயர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்று! மதுரை மாநகராட்சி நிர்வாகமே! தமிழன்னை சிலை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைகளை அகற்றாதே!

21.7.2023 அன்று மீன் சிலை அமைப்புக் குழு தலைவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்ட மன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜூ, தளபதி, புதூர் பூமிநாதன், மாநகர் காவல் துணை ஆணையர் பிரதீப் மற்றும் அதிகாரிகள் பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்று இடத்தை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!