தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று ரேணிகுண்டா, பில்லா-2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன்

இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
தீப்பெட்டி கணேசன் 2010ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி , வசுந்தரா சியேர்ட்ரா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாகவும், ரேணிகுண்டா,பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.