போலி சான்றிதழ் தயாரிக்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் தாக்கப்பட்டார்!

குற்றவாளிகளை காவல்துறை உடனே கைது செய்யாதது ஏன்!
ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் கண்டனம்!

போலி சான்றிதழ் தயாரிக்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி குமரி மாவட்ட தலைவர் ஷெல்லியெ நேற்று விஜய் என்பவர் குண்டர்கள் துணையுடன் கொலை மிரட்டல் விடுத்ததுடன் மிக கடுமையாக ஷெல்லியை தாக்கியுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் ஷெல்லி போட்டோ ஸ்டுடியோ மற்றும் டிசைனிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெல்லியை சமுக விரோதிகள் வன்மத்துடன் தாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும்,
இந்த சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

ஆனால் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை.

போலி சான்றிதழ் தயாரிக்க முற்பட்டதுடன் போலி சான்றிதழை தயாரிக்க மறுத்த ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் செல்வியை குண்டர்கள் துணையுடன் தாக்கிய விஜயையும் அவருடன் வந்தவர்களையும் உடனே கைது செய்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக தமிழக காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

குழுவில் இணைய இந்த லிங்க்-ல் செல்லவும்
https://wa.me/message/5ZNFDVUGHX5OK1

Leave a Reply

error: Content is protected !!