கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே தாய் – மகள் தற்கொலை : வறுமை காரணமாக கைகளை கட்டிக்கொண்டு தாயும் இரு மகள்களும் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளைய நயினார் குளத்தில்  3 பெண்கள்  நீரில் மூழ்கி இருப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மூன்று பேரையும் நீரில் இருந்து மீட்ட நிலையில் ஒருவர் உயிருடனும்  2 பேர் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டனர். உயிருடன் இருந்த பெண் கன்னியாகுமரி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்டவரிடம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த வடிவேல் முருகனின் மனைவி மற்றும் மகள்கள் என்பது தெரியவந்துள்ளது. கணவர் வடிவேல் முருகன் நேற்று உடல்நலக் குறைவால் இறந்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களில் உயிருடன் மீட்கப்பட்டவர் பெயர் சச்சு (40) எனவும், உயிரிழந்தவர்கள் தாயார்  பங்கஜம் (70), மற்றும் சகோதரி மாலா (48) எனவும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மூன்று பேரும் தனிமையில் வாழ்ந்த நிலையில் உணவிற்கு  வழியின்றி இருந்ததாகவும், வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து குளத்தில் கைகளை ஒருவருக்கு ஒருவர் கட்டி கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து மேலும் குமரி மாவட்ட சுசீந்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!