நடப்பு தேர்தல் களத்தில் விஜய் பங்களிப்பு எந்த விதத்திலும் இருக்காது என்பது உறுதி என்றாலும், விஜய் அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது அரசியல் ரீதியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. திராவிட கட்சிகள் ஒருபுறம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் நிலையில், கமல் தனது பிரச்சாரத்தை துவங்கியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , திராவிட கட்சிகளின் அரசியல் குறைகளை மக்களிடம் எடுத்துரைத்தும், தனது மாற்று பார்வையை முன்வைத்தும் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டே தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க போகும் அறிவிப்புக்காக கட்சி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, விஜயின் தந்தை எஸ்.ஏ.சியும் “விஜய் மக்கள் இயக்கம்”என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்த நிலையில், இதற்கு நடிகர் விஜய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததின் அடிப்படையில் அந்த முயற்சி கைவிடப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்தத் தேர்தல் களத்தில் விஜய் பங்களிப்பு எந்த விதத்திலும் இருக்காது என்பது உறுதி என்றாலும், விஜய் அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை நடத்துவது போன்ற செயல்பாடுகள் அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாகதான் நேற்றும் தனது பனையூர் இல்லத்தில் காணொலி வாயிலாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய், “இயக்க நிர்வாகிகள் யாரும் மாற்றுக் கட்சியில் சேர வேண்டாம். நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும்” என்று கூறியதாக சொல்லப்பட்டது, தற்போது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
எனவே கமல்,ரஜினியை தாண்டி இளைஞர்கள் அதிகம் உள்ள நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரைவை தந்து சீமானின் கரங்கைளை வலுப்படுத்தி, தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர நடிகர் விஜய் ஆலோசனைையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.