பாதுகாப்பு நடவடிக்கைக்காக முதலில் துண்டிக்கப்படுவது மின்சாரம்தான்.இந்த இக்கட்டான நேரங்களில் போன்களில் சார்ஜ் இருப்பது மிகவும் இன்றியமையாதது. அதைப் பாதுகாக்க சில டிப்ஸ் இதோ!

நவம்பர் 21-ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்திருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி கடலூருக்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்திலும், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இந்த மாதிரியான நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக முதலில் துண்டிக்கப்படுவது மின்சாரம்தான். இந்த இக்கட்டான நேரங்களில் போன்களில் சார்ஜ் இருப்பது மிகவும் இன்றியமையாதது. அதைப் பாதுகாக்க சில டிப்ஸ் இதோ!

லேப்டாப்

  1. லேப்டாப் போன்ற சாதனங்களை முழுவதுமாக சார்ஜ் செய்யுங்கள்!

மழை வரப்போகிறது என்றதும் அவசர அவசரமாக போன்களையும், பவர்பேங்க்குகளையும் சார்ஜ் செய்யும் நாம் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட மறந்துவிடுவோம். டேட்டா கேபிள் மூலம் லேப்டாப்பின் USB போர்ட்டிலிருந்து போனுக்கு சார்ஜ் ஏற்றலாம் என்பதால் லேப்டாப்பையும் முழுவதுமாக சார்ஜ் செய்வது அவசர நேரங்களில் பயனுள்ளதாக அமையும்.

  1. Wifi, ப்ளூடூத்தை ஆஃப் செய்து வையுங்கள்

ஒரு போனின் சார்ஜை அதிகம் குடிப்பது வயர்லெஸ் சிக்னல்களை கையாளும் Wifi, ப்ளூடூத் போன்ற வசதிகள்தான். இவற்றை ஆஃப் செய்து வைப்பது பெருமளவில் பேட்டரியை மிச்சப்படுத்தும். அதி கனமழையில் ப்ளூடூத் ஹெட்செட்களை பயன்படுத்துவது போனுக்கு பாதுகாப்பானது என்பதால் அப்போது மட்டும் வேண்டுமானால் ப்ளூடூத்தை ஆன் செய்துகொள்ளுங்கள். தேவையில்லாத நேரங்களில் மொத்தமாக போனை ‘Airplane Mode’-ல் போட்டுவிடலாம். முன்பு சொன்னது போல சிக்னல்களை பெறுவதற்கான ஆன்டெனாக்கள்தான் அதிக அளவில் சார்ஜைப் பயன்படுத்தும்.

  1. மின்சாரத் தடை வரும் வரை போனை சார்ஜிலேயே போட்டு வைத்திருங்கள்.

சாதாரண நேரங்களில் தொடர்ந்து போனை சார்ஜிலேயே வைத்திருப்பது பேட்டரி ஆயுளை குறைக்கும் என்றாலும் இதுபோன்ற நேரங்களில் இதைச் செய்வதன் மூலம் கூடுதலாகப் பல நிமிடங்கள் போனை பயன்படுத்தும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். அதனால் மின்சாரம் தடைசெய்யப்படும்வரை போனை சார்ஜிலேயே வைத்திருங்கள். மின்சாரம் விட்டு விட்டு வந்தாலும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சார்ஜ் செய்ய மறந்துவிடாதீர்கள்.

  1. “Push” நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்துவையுங்கள்.

வானிலை குறித்த நிலவரங்களைத் தெரிந்துகொள்ளவும் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கவும் எப்படியும் மொபைல் டேட்டாவை அவ்வப்போது பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். இந்த நேரங்களில் மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் தேவையில்லாத ஆப்களிலிருந்து நோட்டிஃபிகேஷன்கள் குவியும். அதனால் தேவையில்லாத ஆப்களின் ‘Push’ நோட்டிஃபிகேஷன்களை disable செய்துவிடுங்கள். முக்கிய ஆப்களுக்கு மட்டும் நோட்டிஃபிகேஷன்கள் தர அனுமதி கொடுங்கள். இதை செட்டிங்சில் எளிதாக மாற்றி விடலாம்.

5.போனை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள்.

சார்ஜரிலிருந்து போனை எடுத்ததும் உடனடியாக அதை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். பெரும்பாலான போன்களில் இது பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தையும் க்ளோஸ் செய்துவிடும். இதற்குப் பின்னும் பின்னணியில் ஏதேனும் ஆப்கள் ஓடுகின்றனவா என செக் செய்து ‘Force Stop’ கொடுங்கள். புராசஸருக்கு முடிந்தளவு குறைந்த வேலையைத் தருவதன் மூலம் சார்ஜை நன்றாக மிச்சப்படுத்த முடியும்.

  1. பிரைட்னஸை குறையுங்கள்

போனில் பேட்டரியை அதிகம் குடிக்கும் மற்றொரு விஷயம் டிஸ்ப்ளே. இதை முடிந்தளவு குறைவு பிரைட்னஸை மிகவும் குறைவாக வைத்து போனை பயன்படுத்துங்கள். OLED டிஸ்ப்ளே கொண்ட போன் என்றால் ‘Dark Mode’-ல் போனை பயன்படுத்துங்கள். இது பேட்டரியை மிச்சப்படுத்தும். போனில் ‘Battery Saver’ மோட் இருந்தால் அதை பயன்படுத்தவும். தேவையில்லாத வைப்ரேஷன்ஸ் மற்றும் ஒலிகளை அது நீக்கும்.

நெருங்கும் புயல், துண்டிக்கப்படும் மின்சாரம்… போன் பேட்டரியை விரயமாக்காமல் பயன்படுத்த 7 டிப்ஸ்!

  1. அதிகம் போன் பேசாதீர்கள்

முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் போன் செய்து பேசுங்கள். சின்ன சின்ன விஷயங்களை மெசேஜிலேயே அனுப்பிவிடுங்கள். இதுபோன்ற நேரங்களில் சிக்னல் பிரச்னையும் இருக்க வாய்ப்புகள் அதிகம். சிக்னலுக்காக உங்கள் போனை திணறவிடாமல் மெசேஜ் அனுப்பிவிட்டால் அது எளிதாக வேண்டியவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடும்.

‘போனில்தான் 100% சார்ஜ் இருக்கிறதே!’ எனத் தேவையற்ற விஷயங்களுக்கு போனை பயன்படுத்தாமல் இருந்தாலே முடிந்தளவு பேட்டரியை மிச்சம் செய்துவிடலாம். இதுபோன்ற நேரங்களில் போன்களை சார்ஜ் செய்யும் மாற்று வழிகள் எனப் பல சொல்லப்படுகின்றன. உருளைகிழங்கை வைத்து சார்ஜ் செய்யலாம் என்பது போன்ற வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளையும் பார்க்க முடிகிறது. உருளைக் கிழங்கில் மின்னூட்டம் (Charge) இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், இன்றைய ஸ்மார்ட்போன்களை சார்ஜ்செய்யும் அளவுக்கு இல்லை. அப்படி செய்ய நூற்றுக்கணக்கில் உருளைக்கிழங்குகள் தேவைப்படும். இது சாத்தியமான ஒன்று கிடையாது. கார் வைத்திருப்பவர்கள் கார் சார்ஜர் கொண்டு உங்கள் போனை சார்ஜ் செய்துகொள்ளலாம். கையிருப்பில் கார் சார்ஜர் இருக்கிறதா என்று மட்டும் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

9V சார்ஜிங்
LifeHacker
9V பேட்டரிகள் கொண்டு போனை சார்ஜ் செய்யமுடியும் என்றும் சிலர் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. இந்த பேட்டரிகள் பெரும்பாலானவர்களிடம் இருக்காது என்பதுதான் நிதர்சனம். இதே போன்ற ஒரு முறை அமெரிக்காவில் ‘இர்மா’ புயலின் போது இது பற்றிய வீடியோ வைரலானது. அப்போது இதைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. ”இது சாத்தியம்தான் என்றாலும் இதைச் செய்ய வேண்டாம் என்பதே எங்கள் பரிந்துரை” என்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். ”போனுக்கு இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம், சில நேரங்களில் முறையாக இது செய்யப்படவில்லை என்றால் பேட்டரி வெடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது” என்று அப்போது எச்சரித்திருந்திருந்தனர். எப்படி பார்த்தாலும் மிகவும் குறைந்த சார்ஜே (ஒரு கால் பேசும் அளவுக்கு) இவற்றிலிருந்து பெற முடியும்.

செய்திகைளை உடனுக்குடன் பெற https://chat.whatsapp.com/HG6btQp9bheFQOgerJBbgk குழுவில் இணைந்திருங்கள்.

Leave a Reply

error: Content is protected !!