மதுரை சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது இதை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் சுமார் 700 குடும்பங்கள் உள்ளன இங்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது இது சுமார் பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் நான்கு தூண்களும் சேதமடைந்து மேலே உள்ள தொட்டியும் சேதமடைந்துள்ளது இதனால் எப்போது இடிந்து விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.

இதுகுறித்து வெள்ளைச்சாமி கூறுகையில் இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் இருக்கிறது மிகவும் சேதமடைந்த நிலையில் எப்பொழுது விழும் என்ற அபாயத்தில் உள்ளது இதை அப்புறப்படுத்த சொல்லி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வாடிப்பட்டி யூனியன் ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளோம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை அதிகாரிகள் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி சுற்றி பல வீடுகள் உள்ளன ஆகையால் அரசு துரித நடவடிக்கை எடுத்து இந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

Leave a Reply

error: Content is protected !!