தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா: நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இரத்ததான முகாம்..

தமிழ்த் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் போற்றப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாளை, உலகம் முழுவதும் கொண்டாடினர்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் 1954ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பிறந்தவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.

சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், இளம் வயதில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதை அறிந்து போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் ஆகியோரால் ஈர்க்கப்பட்டதாக கூறிய மேதகு வே.பிரபாகரன், தனது 18 ஆவது வயதிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடங்கி, வழிநடத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமாக விளங்கியவர் மேதகு வே.பிரபாகரன்.

தனது கொள்கைகளை விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள வீரர்களுக்கு கற்றுக்கொடுத்த மேதகு.வே.பிரபாகரன், தனது கொள்கையிலிருந்து எப்பொழுதாவது தான் மாறினால் தன்னை சுட்டுவிடுமாறு கூறியுள்ளதாக, அவருக்கு நெருக்கமான பலரும் தெரிவித்துள்ளனர்.

அந்தளவுக்கு தனது கொள்கை மற்றும் தமிழீழ நாட்டின் மீது பற்றுகொண்டவர்.

அவரது 66வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதில் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் “தலைவர் பிறந்தநாள் தமிழர் தலை நிமிர்ந்த நாள்” எனவும் “அன்னைக்கு பிள்ளைகளின் வாழ்த்துகள்” எனவும், “இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்” என்ற வாசகங்கள் பதித்த சுவரொட்டிகள் ஒட்டியும், இனிப்புகள் வழங்கியும், இரத்த தானம் அளித்தும் கொண்டாடப்பட்டு வந்தன.

கொரோனா பேரிடர் காலத்தில் கல்லூரிகள் இயங்காத சூழ்நிலையில் அவசரத் தேவைக்கு இரத்தம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் குருதிக் கொடை பாசறை சார்பாக 6400 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இரத்தான முகாமில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 8000 திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியின் உயிர் காக்கும் உன்னதப் படைப்பிரிவான குருதிக் கொடைப் பாசறையின் வாயிலாக “ஒவ்வொரு துளியும் உயிர்காக்கும், கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்” என்ற உயரிய சிந்தனையோடு இரத்த தானம் அளித்தனர்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற https://wa.me/message/5ZNFDVUGHX5OK1 இந்த லிங்க்-ல் சென்று Whatapp குழுவில் எங்களுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

error: Content is protected !!