மாற்றுத்திறனாளிக்கு ஏலம் கேட்காமல் அடிப்படை விலைக்கே விட்டுக் கொடுத்த பொதுமக்கள்…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத 600 இருசக்கர வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 17.10.2020 ஆம் தேதி பொது ஏலம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்உரிமை வழங்கப்பட்டது. இதில் 500 பேர் கலந்து கொண்டனர்.அதில் 50 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு 20 மாற்றுத்திறனாளிகள் இரண்டு சக்கர வாகனங்களை பொது ஏலத்தில் எடுத்தனர்.
இதில் காலதாமதமாக வந்த ஒரு மாற்றுத்திறனாளி ஒரு குறிப்பிட்ட இரு சக்கர வாகனம் தனக்கு வேண்டும் என கேட்டபோது பொது ஏலத்தில் பங்குபெற்ற அனைவரும் காவல்துறையே மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று அனைவரும் ஒருமித்த கருத்துடன் அந்த குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தை ஏலம் கேட்காமல் அடிப்படை விலைக்கே அவருக்கே விட்டுக் கொடுத்தனர்.

Leave a Reply

error: Content is protected !!