ராஜபாளையத்தில் அரசு பேருந்துகள் சில இடங்களில் தள்ளுவண்டி மாடலாகிய அவலம். நகர்புற பேருந்துகள் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் நகர்புற பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழமையான தாகவே உள்ளது. இதில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வந்த அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றதால் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தள்ளிவிட்டு இயக்கினர். இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே முகம் சுளிப்பு ஏற்ப்படுத்தியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது ராஜபாளையம் பகுதியிலிருந்து நகர்ப்புற, சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கும் அனைத்து பேருந்துகளும் மிகப் பழமையானதாக உள்ளதாகவும் இதனால் சரியான நேரத்திற்கு செல்லும் இடங்களுக்கு செல்வதில்லை எனவும், இதனை இயக்கும் ஓட்டுநர்களும் மன உளைச்சலில் இயக்குவதாகவும் தெரிவித்தனர். மேலும் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளின் முறைகேட்டினால் ராஜபாளையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமத்திற்கு செல்லும் பல வழிதடங்கள் தனியாருக்கு தாரை வார்த்து விடுவதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.

தமிழக முதல்வர் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியும் ராஜபாளையத்தில் அன்றாட பயணங்களுக்கு அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்தும் நகர்புற பேருந்துகள் பழமையான தாகவே உள்ளதால் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!