மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பெளர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
சாமி தரிசனம் செய்ய ஒரு கிலோ மீட்டர் தொலைவு அளவில் கோவிலுக்குள் மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர்.
மேலும் பௌர்ணமி நாளை முன்னிட்டு கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் சாமி தரிசனம் செய்ய வந்தனர். காவல்துறையினர் அறிவுறுத்தியும் பொதுமக்கள் சட்டை செய்யவில்லை இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது மேலும் மேலும் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.