நீட் விவகாரம்: நடிகர் சூர்யாவை ஆதரித்து….அர்ஜீன் சம்பத்தை செருப்பால் அடித்தால் ரூ10000 பரிசு…

நீட் தேர்வு முதல்நாள் தமிழகத்தில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு மரணங்கள் தொடர்வது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் சூர்யா, நீட் தேர்வை மிக கடுமையாக விமர்சித்தார். நீட் என்பது மனுநீதித் தேர்வு என்றும் கிராமப் புற மாணவர்களின் மருத்துவ கனவை நாசமாக்குகிறது எனவும் சாடியிருந்தார். நீதிமன்றம் நீட் தேர்வை அனுமதித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவை இல்லை என இன்று முடிவு செய்திருக்கிறது.

இதனிடையே திண்டுக்கல்லில் நேற்று, இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா கலந்து கொண்டு பேசினார்.

நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்குவார் என அதன் துணை பொதுச்செயலாளர் தர்மா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வந்ததையடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்தை செருப்பால் அடிக்கும் நபருக்கு மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பில் ரூ 10000 பரிசு வழங்கப்படும் என மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் பா.அண்ணாதுரை அவர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்தை தான் ஆதரிப்பதாகவும், அவர் கருத்தை இந்து மக்கள் கட்சியினர் போன்றவர்கள் அடாவடி அறிவிப்பு செய்வது கண்டிக்கக்தக்கது என மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பா.அண்ணாதுரை கேட்டுக்கொண்டார்.

One thought on “நீட் விவகாரம்: நடிகர் சூர்யாவை ஆதரித்து….அர்ஜீன் சம்பத்தை செருப்பால் அடித்தால் ரூ10000 பரிசு…

  1. கண்டிப்பாக அர்ஜுன் சம்பத் என்னும் மதவெறி பிடித்த அடிமை நாயை செருப்பால் அடிக்க வேண்டும்
    விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மாவட்டம் சார்பாக மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்

Leave a Reply

error: Content is protected !!