சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எம்.எல்.ஏ, எம்.பி.கள் நுழைவுத் தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை எழுதவேண்டும். அப்போதுதான் தகுதியானவர்கள் அமைச்சர்களாக வருவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கு அமோக வரவேற்பு….
நீட் விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. குறிப்பாக மூன்று மாணவர்களின் தற்கொலைக்கு பிறகு பிரச்னை வீரியமடைந்துள்ளது. நீட் தேர்வு கூடாது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஆள்கிறவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என யாருக்கும் தெரியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்த நாட்டை ஆளுகிறவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. எந்த தேர்வு எழுதினார்கள் என்று யாருக்கும் தெரியாது.
எம்.எல்.ஏ, எம்பி, அமைச்சர்கள் என எல்லாருக்கும் நுழைவுத்தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை வைத்து எழுத சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.அவ்வாறு செய்தால் நாட்டில் மிகத்தகுதியான அமைச்சர் பெருமக்கள் வருவார்கள் என்று கூறிய அவர், அதில் முதல் தேர்வை பிரதமர் மோடி எழுத வேண்டும், அதன்பிறகு கல்வித்துறை அமைச்சர் எழுத வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறி, இந்த கருத்தை வரவேற்று பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
unmai
sathiyam
சிறப்பு
செந்தமிழன் சீமான் சொல்வது சரியான கருத்து