கல்லறையில் தங்கியிருந்த உதய் என்பவர் உயிரிழந்துவிட்டார் என்ற தகவலை அடுத்து இளைஞரை தோலில் தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றி பெண் ஆய்வாளர் ராஜேஸ்ரியும் போட்டோ எடுத்து சீன் போட்ட அண்ணாமலையும்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடம்பாக்கம், கொளத்தூர், தியாகராயநகர், வேளச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் மழை தொடர்வதால் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு வருகின்றனர்.
இதனிடையே, சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள புளியந்தோப்பு, கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
பின்னர், அண்ணாமலை மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் அங்கிருந்த படகு ஒன்றில் ஏறி வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றனர். அப்போது சினிமாவில் வருவது போல் போட்டோ ஷூட் நடத்தினர். ஏற்கனவே பிரதமர் மோடியின் அரசை போட்டோ ஷூட் சர்கார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார்.தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து பார்த்த போது அவர் உடலில் அசைவு இருந்து உள்ளது.சிறிதும் தாமதிக்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் உதயாவை தனது தோலில் தூக்கிக் கொண்டு வந்து பிறகு ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.அங்கு உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.மேலும் காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை நெகிழச்சிய ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.ஐபிஎஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அண்ணாமலை பாஜக மாநில தலைவரான சென்னை கொளத்தூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றபோது போட்டோ ஷூட் எடுத்து தற்பெருமை செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் இளைஞரின் உயிரை காக்க தோளில் சுமந்து சென்றது பெரும் பாராட்டை பெற்று வந்ததோடு மட்டுமில்லாமல் பாஜகவின் மாநிலத் தலைவரான அண்ணாமலை மற்றும் பெண் காவல் ஆய்வாளர்ன் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.