மதுரை அருகே கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி ஊராட்சி பெண் தலைவருக்கு பதில் அவரது கணவர் நடத்திய கிராமசபை கூட்டத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழமாத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது
இதில் ஊராட்சி தலைவரான பெண் ராஜாத்தி என்பவர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்
ஆனால் ஊராட்சி தலைவரின் கணவர் துரைபாண்டின் இன்று கிராமசபை கூட்டத்தை கூட்டியுள்ளார்
அதற்கு அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் கிராமசபை கூட்டத்தை நடத்தியதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்

மதுரை மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவி வகிக்கும் பெண்கள் பணியை முறையாக மேற்கொள்ளாமல், கணவர், உறவினர் ஆகியோர் அதிக ஊராட்சிகளில் தலைவர் பதவியை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகருக்கு பல்வேறு புகார்கள் குவிந்தன
இதனால் ஊராட்சி தலைவர் பதவியை கணவர்கள் பயன்படுத்தினால், அதிகாரம் செலுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவையே மீறி கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் பதவியிலிருக்கும் பெண்
ராஜாத்தி யை கிராமசபை கூட்டத்திற்கு அழைத்து வராமல் அவரது கணவர் துரைப்பாண்டியன் தலைவர் பதவியை முறைகேடாக பயன்படுத்திகிராமசபை கூட்டம் நடத்தியதுடன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.