‘இஸ்லாமிய சொந்தங்களுக்கு என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்’ – நடிகர் விஜய்

சென்னை: பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்றே தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை மக்களுக்கு உரித்தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!