
முனிச்: ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் – டி’ பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் எதிரணி வீரருடன் பலமாக மோதியதில் பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்பேவுக்கு மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டது.
மருத்துவ உதவி காரணமாக அவர் களத்தை விட்டு வெளியேறி இருந்தார். பின்னர் மீண்டும் களம் கண்டார். இருந்தும் ஆட்டத்தை தொடர முடியாமல் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அதன் பிறகு அவர் வெளியேறினார். Own கோல் முறையில் பிரான்ஸ் இதில் வெற்றி பெற்றது.
இந்தச் சூழலில் எம்பாப்பேவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூக்கு பகுதியில் தண்டு உடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “முதற்கட்டமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. சிகிச்சைக்கு பிறகு அவருக்காக பிரத்யேக மாஸ்க் தயார் செய்யப்படும். அதை அணிந்து கொண்டு அவர் யூரோ தொடரில் பங்கேற்கலாம்” என பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“மாஸ்க் அணிவது குறித்த யோசனை ஏதேனும் உள்ளதா?” என எம்பாப்பே எக்ஸ் தளத்தில் புதிர் போட்டுள்ளார். வரும் 22-ம் தேதி அன்று குரூப் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியுடன் அடுத்ததாக விளையாடுகிறது பிரான்ஸ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.