
இந்தியா இரண்டாக உடையும்.. அதிர்ச்சி தகவலை சொன்ன ஆய்வாளர்கள்!
இது குறித்து நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் புவி இயக்கவியல் நிபுணரான ஃபேபியோ கேபிடானியோ விளக்கமளித்துள்ளார். அது குறித்து கூறியுள்ள அவர், டெக்டானிக் தட்டுக்கள் நகர்வதால் பூமியில் நிலநடுக்கம் ஏற்படுகின்றன. உலகில் உள்ள உயரமான மலைகளும் இதன் காரணமாக தான் உருவாகியுள்ளன என கூறியுள்ளார்.
நிலத்தட்டுகளால் உருவானது தான் இமயமலை – ஆய்வாளர் ஃபேபியோ கேபிடானியோ
இவ்வாறு நிலத்தட்டுக்கள் நகருவதால் மலைகள் உருவாகும் நிலையில், தற்போது இருக்கும் இமைய மலையும் இதேபோன்ற நிலத்தட்டுக்கள் நகர்ந்ததால் உருவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், அதேபோல நிலத்தட்டுக்கள் நகர்ந்தால் இந்தியா இரண்டாக உடையும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். ஆய்வாளர்கள் மத்தியில் டெக்டோனிக் தட்டுகள் நகர்தல் என்ற கருத்து உள்ளது. அதன்படி, நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் நிலத்தட்டுக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிரிந்து சென்றுவிடும். இதுதான் இந்தியாவிலும் நடக்க உள்ளது என அவர் கூறியுள்ளார்.
நிலத்தட்டுக்கள் நகர்வதால் தான் கண்டங்கள் உருவானது – ஃபேபியோ கேபிடானியோ
உலகம் உருவான ஆரம்ப காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும் அது காலப்போக்கில் சிறிது சிறிது துண்டுகளாக உடைந்து பல நிலப்பரப்புகளாக மாறியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி துண்டு துண்டுகளாக உடைந்ததன் காரணமாக தான் தற்போது இருக்கும் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்கள் உருவானதாக கூறப்படுகிறது. நிலத்தட்டுக்கள் நகர்வது மட்டுமன்றி, பூமியின் சுழற்சி, மாறிக்கொண்டே இருக்கும் வானிலை, எரிமலை வெடிப்புகள், விண்கல் தாக்குதல்கள் உள்ளிட்டவையும் நிலப்பரப்பை உடைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா முழுமையான நிலப்பரப்பு இல்லை – ஆய்வாளர்கள்
இந்தியா ஒரு முழுமையான நிலப்பரப்பு இல்லை என கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தியா ஒரு முழுமையான நிலப்பரப்பு இல்லை என்றும் அது பல பல துண்டுகளால் உருவான ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு என்ற கருத்து உள்ளது. இதன் காரணமாகவே, இந்தியா இரண்டாக உடையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.