இந்தி நடிகையான அதா சர்மா, தமிழில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். ‘சார்லி சாப்ளின் 2’ படத்திலும் நடித்திருந்தார். ‘கேரளா ஸ்டோரி’ படம் மூலம் பரபரப்பான இவர், ‘பீட்டா’ அமைப்புடன் இணைந்து திருவனந்தபுரம் வெங்கானூரில் உள்ள பவுர்ணமிகாவு கோயில் அம்மன் கோயிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார். இதற்காக பீட்டா இந்தியா அமைப்பு அதா சர்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. கேரள கோயில்களுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது இயந்திர யானை இது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.