குமரி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
குமரி மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி மாவட்டம் முழுவதும் அதிமுகவினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஞ்சுகிராமத்தில் பேரூர் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பேரூர்செயலாளர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஞானஜெயந்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் ஜெஸீம் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஆட்டோ பரமசிவன், விஷ்ணு, சுந்தரம்பிள்ளை, சுந்தர், சுரேஷ், ஜீவா, தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மயிலாடியில் பேரூர் கழக செயலாளர் மனோகரன் தலைமை தாங்கி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மயிலை டாக்டர் மாணிக்கம், வர்த்தகர் சங்க தலைவர் சுதாகர், மயிலை பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மருங்கூரில் பேரூர் கழக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இரவிபுதூர் கூட்டுறவுச் சங்க தலைவர் லட்சுமி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றியச் செயலாளர் ஜெஸீம் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.