விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு 64வது நினைவு தினம் முன்னிட்டு முன்னாள் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் விங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து வீர வணக்கம் செய்தனர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு ஊழியர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் , விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் சட்ட மாமேதை அம்பேத்கர் என கோஷங்கள் எழுப்பி கட்சியினர் நிர்வாகிகள் பொதுமக்கள் என வீரவணக்கம் செலுத்தினர்.