மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தாமணி புறவழிச்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட நாள்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நவீன மயமாக்கப்பட்டபேருந்து நிறுத்தம் திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் சட்டமன்ற நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில்திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.