விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர, ஒன்றிய, பேரூர் கழக அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணராஜ் ,நகர செயலாளர் ராணா பாஸ்கர ராஜ் ,அம்மா பேரவை நகரச் செயலாளர் ADதுரை முருகேசன், தலைமையில் அம்மா உணவகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திரு
உருவபடத்திற்க்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் R 56 பால்டிப்போ தலைவர் வனராஜ், பூபதி ராஜா வங்கி தலைவர் ராதாகிருஷ்ணன் ராஜா மேற்கு ஒன்றிய கழக செயலாளர் RM குருசாமி , அவை தலைவர் பரமசிவம் சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜ் செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குதுரை, பால்டிப்போ கதிரேசன், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக அதிமுக கட்சித் தொண்டர்கள் , மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…