அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
உற்சாகமாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டு உசிலம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவருக்கும் கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தெய்வேந்திரனை நெஞ்சில் கத்தியால் குத்தியதாக கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.காயமடைந்தவர்கள் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.