
கொச்சி: மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு நடிகர் மோகன்லால் இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார். அவர், மீண்டும் போட்டியிட மாட்டார் என்று செய்திகள் வெளியாயின.
இதனால் நடிகர்கள், குக்கு பரமேஸ்வரன், அனூப் சந்திரன், ஜெயன் செர்தாலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த மலையாள நடிகர் சங்கக் கூட்டத்தில் மோகன்லால், ஒருமனதாகத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அந்தப் பதவிக்குப் போட்டியிட இருந்தவர்கள் பின் வாங்கினர். மற்ற பொறுப்புகளுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.