சென்னை: ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார்.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை போஸ்டராக படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அவர் முன், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் வெட்டப்பட்ட கேக் இருக்கிறது. அருகில் மதுபாட்டில், பிளேடுகள் இருக்கின்றன. இது த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.