தொலைதூர கல்வி படிப்புகளில் சேர ஜூலை 5 முதல் விண்ணப்பம்: சென்னை பல்கலை. அறிவிப்பு

சென்னை: தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர ஜூலை 5 (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை இன்று (ஜூலை 3) வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2024-2025-ம் ஆண்டில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படும். இது தொடர்பாக மாணவர்கள் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் இயங்கி வரும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தை அணுகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!