குமரியில் பூ வரத்து குறைவால் பூக்கள் விலை கடும் உயர்வு.

குமரி கடும் பனிப்பொழிவு. பூக்கள் வரத்து குறைவு. தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு. மல்லிகை கிலோ ரூ.1,500

கனமழை, பனிப்பொழிவு, வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தைக்கு கன்னியாகுமரி, நெல்லை,  தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயம் செய்யப்படும் பூக்கள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனிடையே தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, அதன் படி மல்லிகை பூ கிலோ 1,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ரோஜா,  தாமரை, அரளி உட்பட அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது, கார்த்திகை மாதம் கோவில் விழாக்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் வரும் நிலையில் கனமழை, பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பூக்கள் வரத்து குறைந்துள்ள நிலையில் விலையும் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!