திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக மாநில அளவிளான கபாடிப் போட்டிக்கான ஏற்பாட்டை இளைஞரணியினர் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்ரங்குன்றம் மேற்கு ஒன்றியம் வேடர் புளியங்குளம் கிராமத்தில் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு
- முதல் பரிசு 25000 ரூபாய் மற்றும் 12 அடி சுழல் கோப்பை.
- இரண்டாம் பரிசு 20000 ரூபாய் மற்றும் 9 அடி சுழல் கோப்பை.
- மூன்றாம் பரிசு 15000 ரூபாய் மற்றும் 6 அடி சுழல் கோப்பை.
- நான்காம் பரிசு 10000 ரூபாய் மற்றும் 4 அடி சுழல் கோப்பை.
- ஐந்தாம் பரிசு 5000 ரூபாய் மற்றும் 4 அடி சுழல் கோப்பை.
- ஆறாம் பரிசு 5000 ரூபாய் மற்றும் 4 அடி சுழல் கோப்பை.
- ஏழாம் பரிசு 5000 ரூபாய் மற்றும் 4 அடி சுழல் கோப்பை.
- எட்டாம் பரிசு 5000 ரூபாய் மற்றும் 4 அடி சுழல் கோப்பை.
- சிறந்த ஆட்டக்காரர்கள் சிறந்த ரைடர்கள் மற்றும் சிறந்த அணிக்கான பரிசுகள் & கோப்பைகள் வழங்கப்படும்.
11 டிசம்பர் 2021, 12 டிசம்பர் 2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியினரும் நுழைவுக்கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.ஒன்றிய கவுன்சிலர் தென்பழஞ்சி சுரேஷ் (மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்) இதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறார்.

கபடிப்போட்டி குறித்து மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள 98377 77798, 96296 90575 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.https://news.google.com/publications/CAAqBwgKMNDspwswvfe_Aw?ceid=IN:ta&oc=3