குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அம்மா மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் அரவிந்த், ஆஸ்டின் எம்எல்ஏ, சுகாதார துணை இயக்குனர் போஸ்கோ ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் அஞ்சுகிராமம் ஜவஹர் ஸ்டோர் உரிமையாளர் தொழிலதிபர் செய்யது அப்துல் ரஹீம் மினி கிளினிக்குக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் வழங்கினார.
பின்னர் நடைபெற்ற
நிகழ்ச்சிக்கு பேரூர் அதிமுக செயலாளர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். ஆவின் பெருந்தலைவர் அசோகன், அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், ஜெ பேரவை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அழகப்பபுரம் ஆரம்பசுகாதார மையத்திற்கு சென்றுவந்த அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு
உட்பட்ட காணிமடம், கனகப்பபுரம், செண்பகராமபுரம், சிவராமபுரம், ஜேம்ஸ்டவுண், மேட்டுக்குடியிருப்பு, வாரியூர், பால்குளம் உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் இந்த முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் வாயிலாக பயனைடைவார்கள்.
இந்நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பணியாளர்களை கொண்டு காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சளி, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இ.சி.ஜி கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி, வெப்பநிலை கண்டறியும் வெப்பமானி உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்களுடன், குழந்தை தடுப்பூசி, உயர் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரைநோய்
பரிசோதனை, கண் பரிசோதனை, குடும்பநல சிகிச்சை, ரத்த
பரிசோதனை, சிறு நீர் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அதிநவீன
மருத்துவமனை அமைத்திட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா பெட்டக பரிசு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், மனோகரன், சீனிவாசன், இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் வக்கீல் பாலகிருஷ்ணன், சுந்தரம்பிள்ளை, பரமசிவன், விஷ்ணு, பொன்னையா, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.