கன்னியாகுமரியில் ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடை.

சர்வதேச சு‌ற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடைவிதித்துள்ளது.


பெருநகரங்களுக்கு இணையாக கன்னியாகுமரியில் நடக்கும் புத்தாண்டுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகமெங்குமிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.சதாரண ஓட்டல் முதல் நட்சத்திர ஒட்டல் வரை வண்ண வண்ண விளக்குகள்,கலைநிகழ்ச்சிகள்,அறுசுவை உணவு எனபுத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும்.மேலும் கடற்கரையில் கூடும் சுற்றுலாபயணிகள்,உள்ளூர்பொதுமக்கள் என ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ம்தேதி இரவு கன்னியாகுமரி கடற்கரையில் கூடி பல்லாயிரக்கணக்கானோர் ஓரேநேரத்தில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துவிடக்கூடாது என்ற காரணங்களுக்காக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடற்கரை சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.இன்று(31ம்தேதி) மாலை 6 மணிமுதல் டூவீலர் மற்றும் நான்குசக்கர வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டள்ளதோடு இரவில் கடற்கரையில் குடும்பத்துடன் சுற்றுலாகொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. .மேலும் சொத்தவிளை,சங்குதுறை,பொழிக்கரை போன்ற கடற்கரை சுற்றுலா தலங்களிலும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சுற்றி எட்டு இடங்களில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு சுற்றுலாவாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.கடற்கரைசாலையில் குடிபோதையில் அதிவேகமாக பைக்கில் சென்றால் பைக்கை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்ய உத்தரவிடபட்டுள்ளது.புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம்தேதி விவேகானந்தர் மண்டபம்,மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுசேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.புத்தாண்டு கொண்டாட்டங்களில் விதிக்கப்பட்ட தடைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!