கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை. தேர் திருவிழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்து பெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மார்கழி மாத தேர் திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழா கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன. ஒன்பதாவது நாள் திருவிழாவான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து பல்லாக்கில் சுவாமி ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்சி நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்க பட்டது.
தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அசோகன், அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வந்தன. இதில் அம்மன் தேர் பெண்களாலும், விநாயகர் தேர் சிறுவர் சிறுமிகளாலும் மட்டுமே இழுக்கப்பட்டது. இவ்விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
தேர்த்திருவிழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது. ஆருத்ரா தரிசனம், திருஆராட்டுயுடன் நாளை பத்தாம் நாள் விழாவுடன் மார்கழி திரு விழா நிறைவு பெறுகிறது.