கன்னியாகுமரியில் ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடை.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடைவிதித்துள்ளது. பெருநகரங்களுக்கு இணையாக கன்னியாகுமரியில் நடக்கும் புத்தாண்டுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகமெங்குமிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.சதாரண ஓட்டல் முதல் நட்சத்திர ஒட்டல் வரை வண்ண வண்ண விளக்குகள்,கலைநிகழ்ச்சிகள்,அறுசுவை உணவு எனபுத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும்.மேலும் கடற்கரையில் கூடும் சுற்றுலாபயணிகள்,உள்ளூர்பொதுமக்கள் என ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ம்தேதி இரவு கன்னியாகுமரி கடற்கரையில் கூடி பல்லாயிரக்கணக்கானோர் ஓரேநேரத்தில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துவிடக்கூடாது…
