தாய்லாந்து நாட்டில் இந்திய இளம் மருத்துவ நிபுணர் பங்கேற்பு – குவியும் பாராட்டுகள்.!

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவிலிருந்து சென்ற இளம் மருத்துவ நிபுணருக்கு பொதுமக்கள், மருத்துவர்கள் மத்தியில் பாராட்டுக்கள்- குவிந்து வருகிறது

மதுரையில் பிரபலமான வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் தொற்றுநோய் நிபுணராக பணியாற்றி வருபவர்
டாக்டர் என். சந்தனம்
சமீபத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற உலக சிறுவர் தொற்றுநோயியல் சங்கத்தின் (World Society of Pediatric Infectious Diseases – WSPID) சர்வதேச மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் தொற்றுநோய் நிபுணராக பங்கேற்றார்.

உலகம் முழுவதிலுமிருந்து சிறுவர் தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், சிறுவர் தொற்றுநோய்களின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்திய இளம் தொற்றுநோய் நிபுணர்களில் ஒருவராக தேர்வான மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் சந்தனம் அவர்களின் பங்களிப்பு, மிகச் சிறப்பாக இருந்தது என மாநாட்டின் பிரதிநிதிகள் பாராட்டி வாழ்த்தினர்

மேலும் இந்திய மருத்துவத் துறையின் உலகளாவிய திறனையும் தன் பங்களிப்பையும் வெளிப்படுத்தியது.

அவர் தனது பிரசந்தனையில்,
“பொது நிணநீர் கட்டிகள் (Generalised Lymphadenopathy) கொண்ட ஒரு வயது வந்த சிறுவன் – ஆரம்பத்தில் காசநோயாக (Tuberculosis) சிகிச்சை பெற்றவர், இறுதியில் புரூசெல்லோசிஸ் (Brucellosis) காரணமான கிகுச்சி (Kikuchi) நோயாக கண்டறியப்பட்டார்”
என்ற அரிய வகை மருத்துவக் கேஸை முன்வைத்தார்.

ஒரே நோயாளியில் இரண்டு வேறு தொற்றுநோய்களின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை வெளிக்காட்டிய இந்த வழக்கறிஞை, சிக்கலான நோயறிதலில் விரிவான மருத்துவ மதிப்பீட்டின் அவசியத்தைக் குறிப்பிடுகிறது.

இந்த பிரசந்தனை, சிறுவர் நோயாளிகளில் புரூசெல்லோசிஸ் காரணமான இந்த அரிய நோயின் வெளிப்பாடுகளை வெளிச்சமிட்டதற்காக சர்வதேச நிபுணர்களிடமிருந்து
பாராட்டைப் பெற்றார் மேலும் தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை, மருத்துவத்தின் பரிணாமம் சிறுவர்கள் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படும் திறன், வருமுன் காப்பது போன்ற விழிப்புணர்வு பேச்சுக்கள் அனைவரையும் கவர்ந்தது உலக சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர் சந்தனம் இந்தியாவைச் சேர்ந்த 5 பேரில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரின் செயல்பாடுகளை மருத்துவ வட்டாரங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மதுரை மாவட்ட மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில்

அமெரிக்கா
மெக்சிகோ
பிரேசில்
அர்ஜென்டினா
சிலி
கொலம்பியா
சீனா
இலங்கை
தாய்லாந்து
தென் ஆப்ரிக்கா
நைஜீரியா
எத்தியோப்பியா
பாகிஸ்தான்
இங்கிலாந்து
ஜெர்மனி
பிரான்ஸ்
இத்தாலி
ஸ்பெயின்
ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சார்ந்த மருத்துவ பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!