நடப்பாண்டில் இதுவரை 6,900 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் இதுவரை 6 ஆயிரத்து 966 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை இருந்து வருகிறது. கடுமையான சட்டங்கள் காரணமாக நாய்களை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நாய்களை கட்டுப்படுத்த தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துக் கூறிய மாநகராட்சி அதிகாரிகள், “சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மாநகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டு, விலங்குகள் நல வாரிய வழிகாட்டுதலின்படி அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவற்றுக்கு வெறிநாய்க்கடி நோய்ப் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக 78 பயிற்சி பெற்ற நாய் பிடிக்கும் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இதற்காக 16 நாய் பிடிக்கும் வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள், புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், லாயிட்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு (2023) 19 ஆயிரத்து 640 நாய்கள் பிடிக்கப்பட்டு, 14 ஆயிரத்து 885 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.PauseMute

2024-ம் ஆண்டில் தற்போது வரை 9 ஆயிரத்து 607 நாய்கள் பிடிக்கப்பட்டு, 6 ஆயிரத்து 966 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய 3 மையங்கள் ரூ.20 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 2 புதிய நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. 7 நாய் பிடிக்கும் வாகனங்களும், நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் 3 வாகனங்களும் புதிதாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த ஆண்டு தெருநாய்கள் கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!