கீழடி அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று குழிகள் தோண்டப்பட்ட நிலையில் பருகுநீர் குவளை, சுடுமண்ணால் செய்யப்பட்ட மண்கலன்கள், வட்ட வடிவிலான மூடிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் பொருட்கள் சில தினங்களுக்கு முன் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், தற்போது முதல் முறையாக தங்க ஆபரணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 புள்ளி 5 செண்டிமீட்டர் நீளமும், 1 புள்ளி 99 மீட்டர் விட்டமும் கொண்ட, கம்பி வடிவில் தங்க ஆபரணம் ஒன்று கிடைத்துள்ளதாக இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!