கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை… இலக்கு 2000 பேர் – கலக்கும் தென்காசி நண்பனின் கரங்கள் அறக்கட்டளை.

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் ராயகிரி – ராமநாதபுரம் சாலை சரவணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்க கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை நண்பனின் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் ஆ. ஜெயபிரகாஷ், களப்பணி ஒருங்கிணைப்பாளர் க. சரவணன் மற்றும் ஆலோசகர் மா.வீராசாமி ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சரவணாபுரத்தை சார்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இலவச கபசுரக்குடிநீர் அருந்தினர்.

இது குறித்து நண்பனின் கரங்கள் அறக்கட்டளையினர் கூறிய போது… குறைந்தது 2000 பேராவது பயன்பெறவேண்டும் எனும் நோக்கில் இந்த முன்னெடுப்பு எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

error: Content is protected !!