நாம் தமிழர் சார்பாக வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து சாத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு..

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(12.12.2020)சனிக்கிழமை சாத்தூரில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது

நாம் தமிழர் கட்சி விருதுநகர் தெற்கு மாவட்டம் ( சாத்தூர், சிவகாசி, விருதுநகர் தொகுதிகள்) சார்பாக ….

“வேளாண் சட்டங்களுக்கெதிராகவும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அறப் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..”

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளைப் பெருநிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் கொடிய சதித்திட்டமின்றி வேறில்லை. இதை எதிர்த்துத்தான், வேளாண்மையைபாதுகாக்கும் பொருட்டு உழவர்கள் ஒன்றுதிரண்டு கடந்த 10நாட்கள் மேலாக போராடி வருகின்றனர்.

ஆனால், வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல், அலட்சியம் செய்வதுடன் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும். இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், சனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு வருகின்றன.

ஆகவே, இத்தருணத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்டம் விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது என இந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!