விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் திமுக வினர் ஈடுபட்டனர்.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வினர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அதிமுக திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் செருப்பு கற்கல் வீசியதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த 84 பேர் மீதும் திமுக 113 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில்
பொது இடங்களில் கூட்டம் கூடியது நோய் பரப்பும் நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக
திமுகவைச் சேர்ந்த சுந்தர், மணி, சக்திவேல் ரவி ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்
இந்த நான்கு பேரையும் 15 நாள் ரீமான்ட் செய்து விருதுநகர் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டதை அடுத்து விருதுநகர் சிறையில் அடைத்தனர்.
