பொதுவுடைமை வீரர் ஜீவானந்தத்தின் 58 – வது நினைவு நாள். மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ், கட்டப்பட்டுள்ள மணி மண்டபங்களில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில், மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் படி நாகர்கோவிலில் அமைந்துள்ள பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தத்தின் 58 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் முனைவர் மெர்லியன்ட் தாஸ், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் ஜீவானந்தம் பேரன் ஜீவா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.