அமித்ஷா, மோடியுடன் எடப்பாடி சந்திப்பு – சசிகலா ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி..?

Advertising

சிறையில் இருந்த சசிகலா ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என ஆதரவாளர்கள் கேள்வி..?

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவிற்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது..

இதையடுத்து நேற்றிரவு அரசு மருத்துவ ஆராய்ச்சி நிலையமான பவுரிங் & லேடி கர்சன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் திவாகரன் குடும்பத்தினர், TTVதினகரன் குடும்பத்தினர்,டாக்டர் வெங்கடேஷ் குடும்பத்தினர் இன்று காலை பெங்களூரு சென்றனர். டி.டி.வி தினகரன் மற்றும் ஜெய ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் காத்திருந்தனர்.

மேலும் சசிகலாவிற்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டுமென பரிந்துரை அளிக்கப்பட்டதின் அடிப்படையில் இன்று மதியம் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை சசிகலாவுக்கு நடத்தப்பட்ட RT – PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சசிகலா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

வருகிற 27-ந் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சிறையில் இருந்த சசிகலா ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி…? பிரதமர் மோடி,அமித்சா இருவரையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று சந்தித்த பின் இது போன்று நிகழ்வது எப்படி…? எனவும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டப்படி வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை ஆவாரா…? எனவும் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!