
அமீர் இயக்கத்தில் 2007 வெளியான திரைப்படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.
தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை இன்று வரையிலும் நங்கூரமாய் பிடித்துள்ளது ‘பருத்திவீரன்’ திரைப்படம். திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படம் .
மதுரை மண்வாசத்தை, வீரத்தை, திமிரும் கோபத்தையும் கண்முன் கொண்டு வந்திருப்பார் இயக்குநர் அமீர்.
படத்தில் நடித்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாவே செதுக்கிய அமீர். மதுரை பேச்சு , நடை, பாவனை, தோரணை என பிசிறே இல்லாமல் கதைக்கு தேவையான ஒட்டுமொத்தத்தையும் திரையில் காண்பித்திருப்பார் இயக்குநர்.
ஒரு விழாவில் ரஜினிகாந்த்,” பருத்திவீரன் படத்தை பார்த்துவிட்டு இது உண்மையாவே கார்த்தியின் முதல் படமா என்று யோசித்தேன்..’ என்று கூறினார். அந்த அளவுக்கு பருத்திவீரன் கதாபாத்திரத்தில் கார்த்தி வேற லெவலில் நடித்திருப்பார்.
இன்றும் பிரியாமணியை தமிழ் ரசிகர்கள் ‘முத்தழகு’ என்று தான் அடையாளம் கொள்வார்கள். அந்த அளவுக்கு முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது.
படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்காக இயக்குநர் முதல் நடிகர்கள் வரை போட்ட உழைப்பும் மெனக்கெடல்களும் எண்ணில் அடங்கா..
படம் வெளியாகி 17 வருடங்கள் ஆனபோதிலும், மக்கள் இன்றும் பார்த்து வியக்கக்கூடிய படமாக பருத்திவீரன் இருக்கிறது என்றால் நிச்சயம் மறுக்க முடியாது.
இந்த படத்தில் ‘அறியாத வயசு புரியாத மனசு’ பாடலில் சின்னவயது முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியை நினைவிருக்கா?
அந்த பாடலில் வரும் சிறுவயது முத்தழகுவின் ரீசென்ட் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த படாலில் வரும் சின்னவயசு முத்தழகா இது என்று ரசிகர்கள் ரீசென்ட் போட்டோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.