சாலையில் இறந்து கிடந்த மயிலை மீட்ட வனத்துறையினர்…

மதுரை – சென்னை புறவழிச்சாலையில் மதுரை பாண்டிகோயில் சாலை பிரிவிற்கும்,உயர்நீதிமன்ற வளாகத்திற்கும் இடையே சாலையை கடந்து சென்ற மயில் வாகனம் மோதி அடிப்பட்டுக்கிடந்தது.

அவ்வழியே சென்ற அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பாலயம் கார்த்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்றபோது மயில் இறந்து போனது தெரியவந்தது.
இதையடுத்து சாலையில் இறந்து கிடந்த மயிலை வனத்துறையினர் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.

Leave a Reply

error: Content is protected !!