
மதுரை முத்து சொன்ன அந்த ஒற்றை வார்த்தை… உலகத்தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த வீடியோ வைரல்.!
ரசிகர்கள் பலர் கொண்டாடும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் ஆரம்ப காலகட்டத்தில் தனது இடைவிடாத உழைப்பை சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ காண்பித்து முன்னேறினவர்கள் தான்.
சின்னத்திரை பிரபலங்களில் விஜய் டிவியில் கலக்கியவர்கள் தான் இப்போது அதிகம் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஆரம்பித்து, டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பின்பு தொகுப்பாளராக மாறி, இன்று சூப்பர் ஸ்டாருக்கு இணையாக நடித்து கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேபோல் சினிமாவில் துணை நடிகர்களாக தனது அயராத உழைப்பை மனம் தளராது போட்டு, நடிப்பின் அரக்கர்களாக மாறியிருக்கும் யோகி பாபு, விஜய் சேதுபதி, சூரி, விமல், சந்தானம் ஆகியவர்களையும் நாம் மறக்க முடியாது. இப்படி சினிமா துறையில் ஜொலிப்பவர்களை வருடத்திற்கு ஒருமுறை வெள்ளித்திரை மூலமாக கண்டு அவர்களை புகழ்ந்து வருகிறோம்.

இவர்களது வரிசையில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது தினமும் இடைவிடாமல் தொலைக்காட்சியில் தங்களது திறமைகளை காண்பித்து பிரபலமானவர்கள் பிரியங்கா, மாகாபா, ரக்சன், மணிமேகலை, அர்ச்சனா, ரோபோ சங்கர், மைனா, மகேஷ், தாடிபாலாஜி, பாலா, புகழ், கோபி என பலரும் இருக்கின்றனர். இவர்களது வரிசையில், அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக உலகத்திற்கு ஒளியாகவும் பலரது இல்லங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே நகைச்சுவை நாயகனாகவும் விளங்கியவர் ஸ்டாண்டிங் காமெடியனான மதுரை முத்து. இவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு நகைச்சுவை வார்த்தைகளுக்கும் கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்பொழுது நடுவராகவும் வலம் வந்தவர், மீண்டும் தொலைக்காட்சிகளில் பிராபர்ட்டி காமெடி என்ற புதிய அவதாரத்தை எடுத்து மக்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இப்படி பிரபல தொலைக்காட்சியில் வலம் வரும் மதுரை முத்து, சிறப்பு பட்டிமன்றங்களில் கலந்து கொள்வது, திருமண நிகழ்ச்சிகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்வுகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து தன்னுடைய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இவரது உழைப்புக்கு பலனாக இன்று பள்ளி, கல்லூரிகளிலும், பொது நிகழ்வுகளிலும் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்து வருகின்றனர் பல தொழிலதிபர்கள்.

இப்படி இருக்க, சமீபத்தில் இவர் நடுவராக இருக்கும் நிகழ்ச்சியில் தனது அப்பா, அம்மா மற்றும் மனைவியை நினைத்து கண்ணீர் மல்க பேசிய காட்சிகள் அனைவரது நெஞ்சையும் உருக வைத்தது. மேலும் தனது தாயுக்காகவும் தகப்பனுக்காவும் மறைந்த தனது மனைவிக்காகவும் கோவில் ஒன்றை கட்டி வருவதாகவும் அதை என்றுமே இவர்கள் மூவரின் நினைவாக வைத்திருப்பேன் எனவும் கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரை ஆறுதல் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் எப்பொழுதும் தான் செய்யும் நல்ல காரியங்களை வீடியோவாக இணையத்தில் பதிவு செய்து நீங்களும் உதவி செய்யுங்கள் என உற்சாகப்படுத்தி வரும் மதுரை முத்து, தற்பொழுது தனது அப்பா, அம்மா மற்றும் மனைவிக்காக கட்டிக் கொண்டிருந்த கோவிலின் பணிகள் முடிவடைந்ததாக கூறியிருந்தார். மேலும், தனக்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது என்று பேச தொடங்கியவர், இந்த இடத்தில் ஏழு அல்லது எட்டு அறைகள் கட்டி, அதில் தன்னை போல் தாய் தகப்பனை இழந்த பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் எனவும் குழந்தைகள் மட்டுமல்லாது கைவிடப்பட்ட முதியவர்களையும் அழைத்து வந்து தனது தகுதிக்கு ஏற்ப அவர்களை பராமரிக்க வேண்டும்.இதுவரை தன்னிடம் 3000 புத்தகங்களுக்கு மேல் இருப்பதாகவும் அதனை அவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக கொடுக்க வேண்டும் என நினைப்பதாக கூறியிருக்கிறார்.

இவருடைய, பதிவை பார்த்த இணையவாசிகள், தான் சம்பாதித்த பணம் தனக்கு மட்டும் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் மத்தியில், தனது சொந்தங்களுக்காக கட்டிய கோவிலில், இல்லாதவர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க நினைத்த உங்களது உள்ளம் தான் கடவுள் என கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.